Friday, November 28, 2008

என் இனிய ஈழம்

ஆசியா கண்டத்தின் தெற்கே அழகான ஒரு குட்டி தீவு

இந்தியா என்ற மாபெரும் சரித்திரத்தை கொண்ட நாட்டின் தென் கோடியில் உள்ள குட்டி நாடு

பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்னாலே

கடலின் சீற்றமாக இருக்கலாம் , ட்சுனாமி வந்திருக்கலாம் இந்தியாவை விட்டு தனியே பிரிந்திருக்கலாம்

கோழி முட்டை வடிவத்தில் இந்து மகா சமுத்திரத்திற்கு அழகு சேர்த்து கொண்டிருக்கும் அந்த அற்புத தீவு

ஆசியாவிலே அழகான சுற்றுலா தளங்களை தன்னகத்தே கொண்ட நாடு

தேயிலை தூட்டங்களும், மலைகளும், மலைச்சாரலும் , பணியும் பனிபடர்ந்த செடிகளும் கொடிகளும் காண கண் குளிருமே அடடா எத்தனை அழகான தீவு

இன்னும் எத்தனையோ எண்ணற்ற வளங்களை கொண்ட நாடு

போர்த்து கீசியனின் கண்களுக்கு படாமல் இருந்திருக்குமா என்ன

தன் அழகையு, வனப்பையும் பேணி காக்கவோ என்னவோ

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தன் சொந்தங்களான இந்தியர்களை அழைத்தாள் ,
அவர்களும் அவளை பேணி காத்தார்கள்,

செழிப்புற்றால், வளர்ந்தால் , இப்படியாக சில நூறு ஆண்டுகள் ஓடின

அவளின் அழகை பேணி க்லாப்பதிலேயே குறியாக இருந்த புனிதர்களுக்கு வேறெதுவுமே தோன்றவில்லை ,

அவர்களுக்கு தெரியவில்லை போலும் , இன்னும் கொஞ்ச நாட்களில் நம் சந்ததிகள் இங்கே அடிபட்டு போகும், உயிர்விடும் வாழ வழியற்று அனாதைகலாக்கபடும் என்று .

No comments: