Monday, January 12, 2009

விடியலை நோக்கி நெடுங்கால பயணம். . . . . . . .

மேற்கூரை வேயாத வீடுகள்

எப்போது வேண்டுமானாலும்

எங்கள் மீது குண்டுகள் வீசலாம்

நாங்கள் தமிழர்கள் தாம்

ஆதிவாசிகளான நாங்கள் அகதிகளாய்

காடுகளில் வசிக்க தொடங்கிவிட்டோம்

பாம்புகள்கூட பாசமாக கடிக்கிறதே !

இலை தழைகளை தின்ன பழகிகொள்கிறோம்.

அகதிகளான நாங்கள் ஆடு மாடுகளாய்

அஞ்சு வயசு ஆறு வயசு
பிஞ்சுகளுக்கு ஆயுத பயிற்சி அளிக்க நாங்கள் தரிகெட்டவர்கள் அல்ல .


சிங்களனே !

செஞ்சோலையிலே எங்களின் பிஞ்சுகளை தமிழின குஞ்சுகளை குண்டு வீசி கொன்றாயே

ஈழத்தை வளமாக்கிய எங்களின் ஈரக்குடலை அறுத்தாயே
ரசித்தாயேஎங்களின் படிப்பை தடை விதிதாயே

அரப்போராட்டதிலே ஆயிரம் பேர் குருதியை குடித்தாயே

குருதியை உடல் முழுக்க பூசி ரசித்தாயே

தமிழன் தலை குனிந்து போவான் என்றோ?

முப்பது ஆண்டுகளாய் முட்டி மோதி பார்கிறாய்

தமிழனின் தலை முடியை பிடுங்க முடியவில்லை உன் ஆயுதத்தால் ......

யார் கொடுத்தார் ஆயுதங்கள் என் தமிழனுக்கு, என் தலைவனுக்கு ?

கப்பலில் கடத்திவந்தோம் என்று கணக்கு காட்டினாய் ,

எண்ணி பாரடா உன் கத்து குட்டி ராணுவத்துக்கு தமிழனை அழிக்க நீ வாங்கி குவித்த ஆயுதங்கள் அத்தனையும் ,

உயிர் பிழைத்தால் போதுமென்று புரமுதுகிட்டோடிய உன் படையினர் விடுவிடோடியது.

அரபோராடத்தை ஆயுத போராட்டமாக மாற்றியது யார்? தமிழனா?

படித்து புகழ் பெர்கிறான்

பாரெங்கும் பறந்து கிடக்கிறான்

அதிகாரத்திற்கு வந்தால் அவனை அசைக்க முடியாது என்ற பயம் உங்களுக்கு !




Thursday, January 1, 2009

எழுந்து வா பாரதியே !

அன்று எழுதினாய்
" தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று ".

இன்று பார்

மக்கள் பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கும் நிலையில் கோடி ரூபாய் செலவில் கோயில் கும்பாபிஷேகமாம்

ஒட்டிய வயிறும் வற்றிய மார்பும் உள்ள தாய் மார்களின் குழந்தைகளின் ஆரவாரத்தில் லிட்டர் லிட்டராய் கோயிலில் பாலாபிஷேகம்

இயற்கையின் சாபத்தால் ஒன்றுமே இல்லை இன்னும் பல லட்சம் ஏழை மக்களுக்கு


பிள்ளையார் கேட்டாராம் காஞ்சி பட்டு துட்டும் வேட்டியும்

கைஎந்தியவனுக்கு பத்து பைசா தர்மமாம்

மலையேறிய பகவானுக்கு கோடி கோடியாய் உண்டியல் காணிக்கையாம்

என்று தணியும் எம் மக்களின் பசியெனும் தாகம்
என்று மடியும் பிளாட்பார மோகம்

இது புல்லுருவிகளின் காலம் ..... இன்று வாழ்ந்த உன்னை மறந்து விட்டனர் என்றோ வாழ்ந்தானம் அவனை போற்றுகின்றனர் விழா எடுக்கவும் கோயில் கட்டவும் ...

பாரதியே !!

சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய் இன்று சந்துக்கு சந்து சாதியின் பெயர்கள்

அரசாங்கம் உன் கருத்தை ஏற்றது பள்ளி பாட புத்தகங்களுக்கு மட்டும் . . ...

எழுந்து வா பாரதியே !

எழுதியதை வாங்கிக்கொள்

முப்பது கோடி முகமுடையாள் எனின் சிந்தனை ஒன்றுடையாள் என்றாய்

இன்றிருந்தால் நீ

நூறு கோடி முகமுடையாள் அதிலும் இம்பது கோடி சாதி உடையால் என்று எழுதியிருப்பாய்

புதிதாய் பிறந்து வா பாரதியே

இல்லை இல்லை நீ எழுந்தே வா

நீ இனி பிறந்து வளர்ந்து வருவதற்குள் மடிந்து விடும் இந்த மானுட யுகம் !!

இயற்கைக்கும் பிடிக்கவில்லை இந்த ஏழையை

ஆற்று நீரை நம்பி விதை விதைத்தேன்

தண்ணீர் வந்த பாடில்லை !

என் கண்களில் கண்ணீர் வந்தது !

வீட்டு கூரையின் வழியே வானத்தை பார்த்தேன் . . .

மேகங்கள் சூழ்ந்தன

மனசு குளிர்ந்தது .

காற்றின் வேகத்தை வீட்டு கீற்றின் வழியே அறிந்தேன் . . . .

வீசிய காற்று கூரையை நாசமாக்கியது

பெய்த மழை விதைத்த நெல்மணிகளை வாரி கொண்டு போனது

இறைவனே இயற்கைக்கும் பிடிக்கவில்லையோ இந்த ஏழையை !

புரியாத புதிர் !

நாங்கள் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பது
வறுமை எனும் சிவப்பு கொடு சீண்டியதால் தான்

விளக்குகள் அனைந்தால்தான் எங்களுக்கு விடியலே பிறக்கும்

வளர்ந்ததும் கேட்பாள் என் மகள் யாருக்கு பிறந்தேன் நான் என?

யாரென சொல்வேன் ?

பெற்றுவிட்டேன் வீச மனமில்லை குப்பைதொட்டியில்

விழுந்துவிட்டேன் நான் சாக்கடையில்

என் மகள் மலராக வளரவேண்டும் என்பது என் ஆசை

அவள் மலராவாளா இல்லை நூலை போல சேலை என்பதற்கு
உதரனமவாலா என்பது எனக்கு புரியாத புதிராய் !!!