Monday, January 12, 2009

விடியலை நோக்கி நெடுங்கால பயணம். . . . . . . .

மேற்கூரை வேயாத வீடுகள்

எப்போது வேண்டுமானாலும்

எங்கள் மீது குண்டுகள் வீசலாம்

நாங்கள் தமிழர்கள் தாம்

ஆதிவாசிகளான நாங்கள் அகதிகளாய்

காடுகளில் வசிக்க தொடங்கிவிட்டோம்

பாம்புகள்கூட பாசமாக கடிக்கிறதே !

இலை தழைகளை தின்ன பழகிகொள்கிறோம்.

அகதிகளான நாங்கள் ஆடு மாடுகளாய்

அஞ்சு வயசு ஆறு வயசு
பிஞ்சுகளுக்கு ஆயுத பயிற்சி அளிக்க நாங்கள் தரிகெட்டவர்கள் அல்ல .


சிங்களனே !

செஞ்சோலையிலே எங்களின் பிஞ்சுகளை தமிழின குஞ்சுகளை குண்டு வீசி கொன்றாயே

ஈழத்தை வளமாக்கிய எங்களின் ஈரக்குடலை அறுத்தாயே
ரசித்தாயேஎங்களின் படிப்பை தடை விதிதாயே

அரப்போராட்டதிலே ஆயிரம் பேர் குருதியை குடித்தாயே

குருதியை உடல் முழுக்க பூசி ரசித்தாயே

தமிழன் தலை குனிந்து போவான் என்றோ?

முப்பது ஆண்டுகளாய் முட்டி மோதி பார்கிறாய்

தமிழனின் தலை முடியை பிடுங்க முடியவில்லை உன் ஆயுதத்தால் ......

யார் கொடுத்தார் ஆயுதங்கள் என் தமிழனுக்கு, என் தலைவனுக்கு ?

கப்பலில் கடத்திவந்தோம் என்று கணக்கு காட்டினாய் ,

எண்ணி பாரடா உன் கத்து குட்டி ராணுவத்துக்கு தமிழனை அழிக்க நீ வாங்கி குவித்த ஆயுதங்கள் அத்தனையும் ,

உயிர் பிழைத்தால் போதுமென்று புரமுதுகிட்டோடிய உன் படையினர் விடுவிடோடியது.

அரபோராடத்தை ஆயுத போராட்டமாக மாற்றியது யார்? தமிழனா?

படித்து புகழ் பெர்கிறான்

பாரெங்கும் பறந்து கிடக்கிறான்

அதிகாரத்திற்கு வந்தால் அவனை அசைக்க முடியாது என்ற பயம் உங்களுக்கு !




No comments: