Monday, January 4, 2010

"நான் தமிழன் , நீ தமிழன், நாம் தமிழர்"

என் அன்பு உறவுகளே!
அடுத்தவனுக்கு காவடி தூக்கி தூக்கியே நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். "வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " வந்தவனை எல்லாம் வாழ வைத்துவிட்டு நம் மக்கள் இன்று வாடகை வீட்டில் குடித்தனம் பண்ணிகொண்டிருக்கிறோம்.
தமிழர்களுக்கு உள்ள எண்ணம் நமக்கென்ன வந்தது, நான் சாப்பிடுறேன் , புள்ளைங்கள படிக்கச் வெச்சேன் , சாக போறேன் . என் பேரு என் பெரபுல்லைகளுக்குகூட தெரியாம போயிடுது. இது என்ன வாழ்க்கை?.
என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த இந்த மண்ணை அடுத்தவன வாழ விட்டுட்டு ஆழ விட்டுட்டு , குந்தகூட இடம் இல்லாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கோம்.
தமிழன் இல்லாத நாடு இல்லை , ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை , நாதியும் இல்லன்னு இனி சொல்லவே வேண்டாம் . இனிமேல் இவனுக்கு வீடும் இருக்காது .
என்னைக்கு இது என்னுடைய மண் , இது எனக்கானது, இந்த நாட்டை நாம்தான் ஆளவேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறதோ அன்று தான் நாம் உருப்படபோகிறோம் .
எதற்கு எடுத்தாலும் டெல்லிய எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறோம் , மனச தொட்டு யோசிச்சு பாருங்கள் இந்திய சுதந்திரத்திற்காக நம்முடைய பாட்டனார்கள் போராடவே இல்லையா, உயிர் விட வில்லையா , வெள்ளையனின் சிறையில் வாடா வில்லையா, அப்படி இருந்தவர்கள் எல்லாரும் வெறும் பாட புத்தகத்தில் மட்டுமே தெரிபவர்களா?
இறையாண்மை - இந்த வார்த்தை உறவுகள் கொல்லபடுவதை பார்த்து அமைதியாக இரு என்ற அர்த்தம் உடையதோ என்று என்ன தோன்றுகிறது இப்போது.
இன்னும் எத்தனை உறவுகளின் மரணத்திற்கு நாம் காரணமாக போகிறோம்?. மௌனமாகவே
இருந்து தொலைத்து .
என் உறவுகளே! யோசித்து பாருங்கள், நாம் செய்தது அனைத்தும் நல்லது தானா? நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் என்ன செய்ய போகிறோம் ? ஆங்கிலேயனிடம் பெற்ற சுதந்திரத்தை இன்று டெல்லியிடம் தொலைத்து விட்டோம். எப்படி வாழ்வார்கள் நம் சந்ததியினர் , மானத்தோடும், வீரத்தோடும்.
உலகத்தில் எந்த மூளையில் தமிழன் பாதிக்க பட்டாலும் குரல் கொடுக்க கத்துகொள்வோம், அரசியல், சாதி, மதம் என்று பிரிந்து நமக்கு நாமே குழிதோண்டி கொள்ள வேண்டாமே. நமக்கான அடையாளம் மொழி, இந்த மொழி தான் உங்களை என் உறவுகலாக்கியது , உங்களை அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று அழைக்க வைத்தது . இந்த மொழி தான் உங்களை அறிமுகம் செய்தது எனக்கு.
தமிழன் பாதிக்கபட்டால் எனக்கென்ன என்று டெல்லி நினைக்கட்டும் ஆனால் என் தமிழ்நாட்டு உறவுகள் நினைக்கலாமா ?
உங்கள் எதிர்ப்பை உடனே காட்டுங்கள் எனக்கென்ன என்று இருந்த டெல்லி அதிரும், அரளும் . நமக்கான தேவை நிறைவேறும், தமிழன் பாதிக்கபடுவது நிற்கும் . அரசியல் பேரால் நாம் பிரிந்து கிடப்பதால் தான் நாம் இன்று தண்ணீருக்கும் அவஸ்த்தை படுகிறோம் . மொழியால் ஒன்றிணைவோம், தமிழனுக்கு அநீதி இழைக்கபட்டால் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
உங்கள் குரலை கொடுங்கள் போராட வேண்டியது எங்கள் வேலை .
"நான் தமிழன் , நீ தமிழன், நாம் தமிழர்"

யார் தீவிரவாதி?

பண்டாரநாயக ஆரம்பித்தது இந்த இன வெறி
ஐயோ வரப்போகிறது அரசு ஆணை
சிங்களம் மட்டுமே இனி அரசாங்க மொழி
தொலைந்தோம் நாம் துடித்தான் தமிழன்.
என்ன செய்யலாம்? யோசித்தான் தமிழன்
கடைகளை கொளுத்தலாமா?
சிங்களனை அடித்து உதைக்கலாமா? என்று பலவகையான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன அனைத்து தமிழனுக்குள்ளும் .
சகோதரர்களே அதுவல்ல நமது பாதை என்றது ஒரு குரல், அனைத்து தமிழர்களும் திரும்பி பார்த்தார்கள் சொன்னவர் யார் என்று, அவர்தாம் தந்தை செல்வா .
சரி என்ன செய்யலாம்? என்றார்கள் அனைவரும்.
அரசுக்கு எதிராக அமைதிபோராட்டமே....
அமைதியான இந்த போராட்டமே நாம் iஎதிர்கால வாழ்வை நல்வழியில் அமைக்கும் என்றார் தந்தை செல்வா.
தந்தை செல்வாவின் அழைப்பை ஏற்று சூன் மாதம் இன்தாம் நாள் ஆயிரத்து தொள்ளயிரத்து ஐம்பத்தி ஆறாம் ஆண்டு நடை பெற்ற அமைதி ஊர்வலம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழர் தலைகள், அரசுக்கு எதிரான கோசம் மட்டுமே இவர்கள் தாங்கிய ஆயுதம் அன்று .
கொழும்பு துறை முகத்தில் இருந்து பனி முடிந்து திரும்பிய சிங்களர்களின் கண்ணில் பட்டது கடலாய் திரண்டு வந்த தமிழர்களின் தலைகள்.
தமிழ் பேசதெரிந்த சிங்களன் ஒருவன் என்னவென்று எடுத்து சொன்னான் மற்றவர்களுக்கு என்ன கோசம் என்று . சிங்களன் கொதித்தான்,
என்ன திமிர் இவர்களுக்கு? சிங்கள நாட்டில் சிங்களம் ஆட்சி மொழியானால் இவர்களுக்கு என்ன ?
ஒண்ட வந்தவர்கள் சுரண்டியது போதாதா? இன்னும் என்ன வேண்டுமாம் இவர்களுக்கு,
நன்றாக படிகிறார்கள், அனைத்து துறைகளிலும் வேலை பெற்றார்கள், வீடு கட்டினார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள் இதற்கு மேலும் என்ன வேண்டுமாம்?
இவர்களை இப்படியே விடகூடாது ஒன்று சேருங்கள் ஊர்வலத்தினரை தாக்கலாம் என்று உடனடி ஆயுதம் கற்களை எடுத்து வீசி அமைதி ஊர்வலத்தினை கலைக்க எண்ணி ஆயிரமாயிரம் தமிழரின் குருதியை கொணர்ந்தார்கள் . அமைதி போராட்டம் நடத்திய தமிழர்கள் அன்று அடி மட்டும் வாங்கினார்கள் திரும்ப அடிக்கவே இல்லை காரணம் தந்தை செல்வாவின் பதை .
அடுத்த padhinaindhu நாட்களுக்குள் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லபட்டார்கள்.
இத்தனை உயிர்பலி கொடுத்தும் தமிழர்களால் எத்தனை சிங்களர்கள் இறந்தார்கள்? அமைதி போராட்டத்தின் நடுவே தீவிரவாதத்தை தமிழன் செய்தானா?.
தமிழன் தன் உரிமையை காக்க தன் சொந்த நாட்டில் அமைதி ஊர்வலம்கூட செல்ல முடியாத நாடு இலங்கை.
இங்கே தீவிரவாதி யார்?

நன்றி தேவநாத குருக்களுக்கு!

என் அருமை தமிழ் உறவுகளே இன்றும் பெரியாரின் பேரன்களுக்கு மகிழ்ச்சி தான்.
வாய் கிழிய , கத்தி கொண்டிருக்கிறோம் இங்கே அது கடவுள் அல்ல , என் உறவான சிற்ப்பிகளின் கலைக்கு எடுத்துகாட்டு,
அதற்கு கண் படைத்தவன் மனிதன் . அதனால் சிலைகள் எதையும் பார்க்க முடியாது என்பதை நீங்கள் உணரவேண்டும்.
யோசித்து பாருங்க எத்தனை முறை இப்படி பட்ட பார்பான்களின் கையினால் விபூதி வாங்கி பூசி உங்களது அழகான நெத்தியை அசிங்க படுத்தியிருகிரீர்கள் என்று .
அந்த அழகான சிலைகள் எப்போதும் அருள் பாலித்தது கிடையாது, நம்மை ஏமாத்த பார்ப்பான்கள் சோறு திங்க அவன் உண்டு பண்ணிய சூழ்ச்சி இந்த கோயில்கள், மந்திரங்கள்.
நீங்க கோயிலுக்கு போயி அவன் தட்டுல காசு போட்டதன் அவன் சோறு திங்க முடியும் அதுக்கு உங்கள பயமுறுத்துறது அவன் தொழில் . இபோ புரிஞ்சதா பார்ப்பான்களின் சூழ்ச்சி.
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை ,
இருந்திருந்தால் சுனாமி வராமல் தடுத்திருக்கலாம், பள்ளி அறையிலே தேவநாதன் பார்பான் போன்றவர்கள் பள்ளி கொண்டிருப்பார்களா?
சங்கர் ராமன் தான் கொலையுண்டிருப்பாரா ?
அய்யா தமிழர்களே எங்க மாமல்லபுரத்துக்கு வாங்க அய்யா என் சகோதரர்கள் தான் உங்க கடவுளையே படைக்கிறாங்க , இருநூறு முன்னூறு ரூவா கூலிக்கு .
அவன் படைச்ச கடவுள் எப்படி அய்யா எங்களை படைக்கும் காப்பாத்தும் ?
தாயை வணங்கு, தந்தையை வணங்கு, உன்னை யார் என அறிமுகம் கொடுத்த தமிழ் மொழியை வணங்கு.
வாழ்க தமிழ், வளர்க பெரியாரின் புகழ்
'நான் தமிழன் நீ தமிழன் நாம் தமிழர்"

இனி இந்தி மட்டுமே !!!!


என் தமிழ் உறவுகளே,
இனி இந்த இந்திய திருநாட்டின் ஆட்சி மொழி "இந்தி" மட்டுமே, அரசு எந்திரங்கள் இந்தியில் மட்டுமே இயங்கும்.
வருகிற சனவரி மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் .
நீதி மன்றங்களின் மொழி இனி இந்தி,
தொடர்வண்டி போக்குவரத்து நிலையங்களில் முன் பதிவு படிவங்கள் இந்தியில் மட்டுமே இருக்கும்,
காவல் துறை இந்தி பேசும்.
உங்களுடைய குடும்ப அட்டை இந்தியில் மட்டுமே அச்சிடபட்டிருக்கும்,
அனைத்து அரசாங்க நிகழ்வுகளும் இந்தியிலே மட்டும் இருக்கும்.
இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேளையில் முன்னுரிமை.
இந்தி எழுத படிக்க தெரியாதவர்கள் துணைக்கு படிக்க தெரிந்தவர்களை அழைத்து செல்லவும் அல்லது வேலைக்கு அமர்த்தி கொள்ளவும்.
என் தமிழ் உறவுகளே! இப்படி ஒரு அறிவிப்பு நமது அரசு விடுத்தால் என்ன செய்வோம் நாம்?
ஈழ வரலாறு தெரியாத அல்லது அந்த போராட்டத்தினை அசிங்க படுத்த நினைக்கும் அதி புத்திசாலிகளிடம் இந்த கேள்வியை கேளுங்கள்?
ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து ஒன்று சனவரி முதல் தேதி அன்று இலங்கை அரசு "இனி சிங்களம் மட்டுமே" என்ற சட்டத்தை கொண்டுவந்த பொது முப்பத்தாறு லட்சம் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் ?
வன்முறையில் ஈடு பட்டானா? பேருந்தை koluthinaanaa? இல்லை சிங்களர்களை கொலை செய்தானா? இல்லவே இல்லை அப்போதும் அமைதி போராட்டம் தான் வேறு வழி இல்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காந்திய வழியாம் அவர்களை வழி நடத்தியவர் தந்தை செல்வா, காந்தியை பெருதும் மதித்த ஒரு மாபெரும் தலைவர் அவர்.
கோரிக்கைகளை வைத்தார்கள் அவ்வளவுதான் . அப்படி என்ன கோரிக்கையா?
சிங்களம் ஆட்சி மொழியாகவே இருக்கட்டும் , நாங்கள் வாழும் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டுமாவது தமிழை அனுமதியுங்களேன் .
இதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பலன் என்ன கிடைத்திருக்கும் என் தமிழர்களுக்கு?
வேற என்ன நாங்க தீவிரவாதம் பண்றோம்னு சொல்றீங்க அதா தான் எங்க கோரிக்கைகளுக்கு பலனா சிங்களர்களிடம் நாங்க பெற்றோம்,
அடி உதை கொலை எத்தன தமிழன அமைதி போராட்டத்தின் போதே நாங்க மரணத்துக்கு அனுப்பினோம். எப்போ எடுத்தோம் நாங்க தீவிர வாத பாதையை?
எனதருமை உறவுகளே !
வரலாறு தெரியாத, சிங்கள அரசுக்கு வக்காலத்துவாங்கும் நம் சக தமிழர்கள் நாம் ஒவ்வொருவரை சுற்றியும் இருக்கிறார்கள் அவர்களிடம் கேளுங்கள் இனி இந்தி மட்டும் என்று இந்திய அரசு அறிவித்தால் என்ன செய்வாய் நீ என்று?.
தமிழன் மட்டும் அல்ல மற்ற மொழி பேசுபவர்களிடமும் கேளுங்கள், தயவு செய்து இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்புங்கள்.

" நான் தமிழன் நீ தமிழன் நாம் தமிழர்"