Thursday, April 9, 2009

மழைகாலத்தின் மாலை வேளையில்

மழை காலத்தின்
மாலை வேளையில்
மழை ஓய்ந்தபின்
நீயும் நானும்
அந்த அழகான பூங்காவில்
நடந்து சென்று
கொண்டிருந்தோம்

திடீரென

தேன் கூடு காட்டுகிறேன்
அந்த மரத்தில்
என்று அழைத்து
சென்றாய்

ஆசையாய்
உன்னோடு
வந்தேன்

நான் மரக்கிளையை
அண்ணாந்து
பார்த்த நேரத்தில்
கிளையின் நுனியை
இழுத்து விட்டாய்

மரமோ
தான் சேகரித்து
வைத்திருந்த
தண்ணீர் பூக்களை
என் மீது
அழகாய் தூவியது

என் பிறந்த நாள்
வாழ்த்தை
எத்தனை அழகாய்
சொன்னாய் .

உன்னோடு
நடந்து செல்லும்
போதெல்லாம்
உன் கைகளை
இறுக பற்றி கொண்டே
நடப்பதில்
எனக்கு
ஆனந்தம் அதிகம் .......

யாரவது
பார்ப்பார்கள் என்று
என் கைகளை
எடுத்து விட்டு
கொண்டே வருவாய்

உன்னோடு
நான்இருக்கும்
போதெல்லாம்
உன்னை தவிர
வேறெதுவுமே
என் கண்களுக்கு
புலப்படுவதில்லையடா

ஒரு நாள்
யாரும் இல்லாத
நேரத்தில்
பேசிக்கொண்டிருதோம்
நீயும் நானும்
ரொம்பவும் எதார்த்தமாக

நான் சற்றும்
எதிர்பார்க்காத நேரத்தில்
நீ கொடுத்த முத்தம்
இன்னும்
என் இதழோரத்தில்
இனிக்குதடா

என்னை
சந்திக்க
வரும்போதெல்லாம்
ஏதாவது
ஒரு பரிசு
பொருளோடு
வருவாய்

வேண்டுமென்றே
அது பிடிக்கவில்லை
என்பேன்

சங்கோஜத்தில் கோனும்
உன் முகத்தை காண
அத்தனை
ஆவலடா எனக்கு

பிறகு
சும்மா என்று சொல்லும்
போதே குட்டுவாய்
என் தலையில்
எங்கே
வலித்துவிடுமோ என்று பயந்து கொண்டே மெல்லமாக

உன்னை சந்தித்த பின்பு
நான் தூங்கிய
நேரங்கள்
ரொம்ப ரொம்ப குறைவு

கனவுகளில் கூட
எதாவது
பரிசு பொருளோடு
வருகிறாய்

இரவுகளில்
நான் ரொம்பவும்
வெட்கமடைகிறேனடா