Saturday, April 5, 2008

நடைபின வாழ்க்கையில்!!!


என்றோ
நடந்த திருமணம் ,
லேசாய் தெரிந்த முகங்கள் ,
மாபிள்ளையாக நான் .

அன்றே வந்த இரவு
கூச்சமும்
வெட்கமும்
நிறைந்த
இருட்டான
வெளிச்சத்தில் அவள்

எத்தனையோ முறை
என் உடுப்புகளை நனைத்த
என் மகன்

விளையாட்டாய்
அவன் உதைத்த நாட்கள்

அப்போது
எல்லாம் பூரித்து போன மனசு. . . .

சின்ன சின்ன
மறதியால்
சில தவறுகள்
ஏற்படும் போது
"கெழம் எப்போ தான் போகுமோன்னு
வெளிப்படையாய் சொல்லும் போது ,
துடித்து போகிறது இதயம் ......
கலங்கும் என் கண்கள் .......

அந்த காலங்களில்
மனம் துடித்து போனால்
ஆறுதல் சொல்ல
அவள் இருந்தால்

இப்போது
இந்த நடை பிண
வாழ்க்கையில்
அவளின் நினைவுகள் மட்டும்......!!!

Friday, April 4, 2008

புதுமை பெண்கள்


நாகரீகமாக
நான்கு இடங்களை
மட்டும்
மறைக்கும் ஆடை

மஞ்சள் பூசிய
முகத்தில்
கலர் பவுடர்கள்
கிறங்க வைக்கும்
உதட்டு சாயங்கள். . . .

மான் விழிகளில்
மயக்கும் மைகள். . . ..

கார்மேக கூந்தலில்
பிளாஸ்டிக் மல்லிகை. . . .

காளையரகளை
சொக்க வைக்கும்
உதட்டோர புன்னகை. . . . .

அசரவைக்கும்
ஆளுயர ஹீல்ஸ்
இத்தனையும் காணப்படின்........


இவைகள் தாம்

இருபத்தோராம் நூற்றாண்டு பெண்களின் அடையாளங்கள் ...........

நூறாவது மாபிள்ளை

மஞ்சள் பூசிய முகம்
ஆழ்ந்த வெட்கத்தில்

நிறத்திற்கு ஏற்றது போல
எடுப்பான திலகம்

எப்போதுமில்லை இன்று
தலை முழுக்க மல்லிகை

ஆனந்தத்தில் அடிக்கடி
முகம் பார்க்க தூண்டும் மனசு

கண்ணாடி பிம்பத்தின்
கண் சிமிட்டல்

நூறாவது மாபிள்ளை
பெண் பார்க்க வந்தானாம்

முதிர் கண்ணியை !!!!!!

நிலவே நீ !


கவிஞனின்
கனவு கன்னி !

வெப்பம் தீண்டாத
வெள்ளை மாளிகை !!

தேய்ந்தாலும் தீராத
அட்சய பாத்திரம் !!!


கதிரவனின் அந்த புறத்தில்
அர்த்த சாமத்து அழகி !!!

எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் என்றும்
முதிரா பருவ மங்கை

கவிதையே நீ தானடி !!

எழுதினேன் ,
எழுதுகிறேன்,
எழுதிக்கொண்டேயிருப்பேன்
அவளை பார்க்கும் போதெல்லாம்
புது புது வரிகளாய்!!!

பெண்ணே நீ சங்கமமா ? சரணலயமா ?

அன்ன நட , சிட்டு குருவி யின் ஓட்டம் ,
கழகு பார்வை ,
கிளியின் மூக்கு , மயில் தோகை கூந்தல் ,
குயிலின் ஓசை ,
பெண்ணே !!!!!!
நீ சங்கமமா ? சரணலயமா ?

நீ வருவாய் என

நினைவுகளை மெழுகாக்கி
செதுக்கி வைத்தேன்
இதயத்தில் உன்னை ,

உன் பார்வை பட்டு
உருகியதால்
உடல் முழுக்க
கலந்து விட்டாய்

நினைவாக
இருந்த நீ
என் வாழ்வின்
நிஜமாகிவிட்டாய் ,
என் உடலின் உயிராகி விட்டாய்
உயரின் மூலமாகிவிட்டாய்,

நினைவுகளோடு
சுமந்த உன்னை
நிஜமாகவே
சுமப்பதர்க்காக

என் வாழ்வின்
ஒவ்வொரு
வினாடியையும்
உனக்காகவே சமர்பிக்கிறேன்
நிச்சயம் நீ வருவாய் என!!!!!!

உன் அன்பு காதலன்

குமரன்

pennne

பெண்ணே
நான் உன்னோடு
இருந்த காலங்களில்
பூக்களை ரசிக்க
பழகவில்லை ,
அவற்றைவிட
மென்மையாக
நீ இருந்ததால்........
இபோதும்
நீ மென்மையாகத்தான்
இருக்கிறாய்
ஆனால்
ரொம்பவும் மௌனமாக.......
இபோதேல்லாம்
பூக்களை ரசிக்க
பழகுகிறேன் ,
ஆனால்
அவற்றின்
ஏளன சிரிப்பை
என்ன செய்ய?

காதலியே !!!!

வியக்க வைக்கிறது
உன் தந்தையின்
அறிவியல் முயற்சி
செயற்கை நிலவாய்
உன்னை படைத்து

வழிபாடு


நவ கிரக வழிப்பாட்டில் சுற்றுக்களை எண்ணுவதிலே
சிக்கி கொல்கிறது மனம்...
இதில் எதை சொல்லி... எதை வேண்ட...