Monday, December 15, 2008

இறைவா!


யாரென தெரியாது
யாருக்கோ
பிறந்துவிட்டேன்

தாய் முகம்
பார்க்குமுன்னே
தொட்டியில்
விழுந்துவிட்டேன்

குப்பை தொட்டியில்
விழுந்துவிட்டேன் !

குப்பை தொட்டியே
பிறப்பிடமாய்

தெருவோரமே
வளர்விடமாய்

அன்பு
பாசம்
இறக்கம்
போன்றவற்றின்
அரிச்சுவடியே
தெரியாமல்
வளர்ந்து விட்டேன்

யார் மீதும்
பாசமும் கொள்ளாமல்
நேசமும் கொள்ளாமல்
பணத்தின் மீது
பாசம் கொண்டு
பாதகம் செய்ய முனைந்தேன்,

என்னால்
தங்க நகை இழந்தோர்
எத்தனை பேர்

தாலி இழந்தோர்
எத்தனை பேர்

மேலாக
உயிரும் இழந்தோர்
எத்தனை பேர்

எண்ணிலடங்கா !!

இறைவா

நான் செய்த பாவங்களுக்கு

நீ என்னை ரட்சிக்க வேண்டாம்


கொடூரமாக எனை கொன்றுவிடு !!!

Wednesday, December 3, 2008

இனி . . . . . !


ஐயோ ! மணி எட்டு ,
அவசரமாய் எழுந்து பல் கூட துலக்காமல்
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறேன் ,

அதோ பேருந்து நிறுத்தத்தில் நீ !
கவனித்தேன் உன்னை
கவனிக்கவில்லை சிக்னலை
என் மனசு முழுக்க நீ
இனி
என் வீட்டு பூஜை அறையில் போட்டோவில் மட்டுமே நான் !!

Tuesday, December 2, 2008

பூ பூவாய்


வண்டுகள்
வாசம் செய்யும்
பெண்கள் கல்லூரி!!

ஒரு நாள்
வாழ்க்கைக்கு
எத்தனை
சப்தமில்லா
சிரிப்புகள்
உங்களுக்குள்!!


எப்படி
உங்களால் மட்டும்
முடிகிறது
எப்போதும்
சிரித்துக்கொண்டே
இருக்க!!




Friday, November 28, 2008

என் இனிய ஈழம்

ஆசியா கண்டத்தின் தெற்கே அழகான ஒரு குட்டி தீவு

இந்தியா என்ற மாபெரும் சரித்திரத்தை கொண்ட நாட்டின் தென் கோடியில் உள்ள குட்டி நாடு

பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்னாலே

கடலின் சீற்றமாக இருக்கலாம் , ட்சுனாமி வந்திருக்கலாம் இந்தியாவை விட்டு தனியே பிரிந்திருக்கலாம்

கோழி முட்டை வடிவத்தில் இந்து மகா சமுத்திரத்திற்கு அழகு சேர்த்து கொண்டிருக்கும் அந்த அற்புத தீவு

ஆசியாவிலே அழகான சுற்றுலா தளங்களை தன்னகத்தே கொண்ட நாடு

தேயிலை தூட்டங்களும், மலைகளும், மலைச்சாரலும் , பணியும் பனிபடர்ந்த செடிகளும் கொடிகளும் காண கண் குளிருமே அடடா எத்தனை அழகான தீவு

இன்னும் எத்தனையோ எண்ணற்ற வளங்களை கொண்ட நாடு

போர்த்து கீசியனின் கண்களுக்கு படாமல் இருந்திருக்குமா என்ன

தன் அழகையு, வனப்பையும் பேணி காக்கவோ என்னவோ

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னாலே தன் சொந்தங்களான இந்தியர்களை அழைத்தாள் ,
அவர்களும் அவளை பேணி காத்தார்கள்,

செழிப்புற்றால், வளர்ந்தால் , இப்படியாக சில நூறு ஆண்டுகள் ஓடின

அவளின் அழகை பேணி க்லாப்பதிலேயே குறியாக இருந்த புனிதர்களுக்கு வேறெதுவுமே தோன்றவில்லை ,

அவர்களுக்கு தெரியவில்லை போலும் , இன்னும் கொஞ்ச நாட்களில் நம் சந்ததிகள் இங்கே அடிபட்டு போகும், உயிர்விடும் வாழ வழியற்று அனாதைகலாக்கபடும் என்று .

எங்கே என் இந்தியன்

இரு நூறு ஆண்டுகள் ஆங்கிலேயனிடம் அடிமை பட்டு கிடந்தான் ,

இடையில் இவனுக்கு ஏதோ ஒரு திமிரு கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தானோ என்னவோ , நம் நாட்டை நாமே ஆண்டால் என்ன என்ற எண்ணம் என்று தான் நினைக்கிறேன்,
இவனுக்கு சுதந்திரத்தின் மீது இல்லா மோகம்.......... போராட ஆரம்பித்தான் அப்போதே நீயா நானா போட்டி.
பல மாகாணங்களாக பிரிந்து கிடந்தான் , அனைவரும் ஒன்றினைந்தர்கள் சுதந்திரம் பெறுவதற்காக .

ஆரம்ப காலங்களில் துண்டு துண்டாக பிரிந்து கிடந்த மன்னர்கள் தொற்று வியாதி தொட்டது போல மற்ற நாட்டு மன்னன் ஆங்கிலேயனுக்கு வரி கொடுக்கவில்லை நாமும் கொடுக்காமல் இருந்தால் என்ன என்று எண்ணினார்கள் ஒரு வேளை இது சுதாந்திர போருக்கு வித்திட்டு இருக்கலாம்
இதில் பல வேடிக்கைகள் நிறைந்திருக்கிறது , ஒரு சில நாட்டு மன்னர்கள் சுதந்திரம் வேண்டும் என்றார்கள் , பல மன்னர்கள் ஆங்கிலேய துறைகளுக்கு ஒத்து ஊதியும், காட்டி கொடுத்தும், கூட்டி கொடுத்தும்வந்திருக்கிறார்கள் என்பது வேதனை, வெட்கம் அவமானம் .
எப்படியோ சுதந்திர தாகம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்ப காலங்களில் வளர்ந்து வந்திருக்கிறது

ஒன்றாகத்தான் ஆரம்பித்தார்கள் ஆனால் தனித்தனியாக தீர்மானம் போட்டு ஆங்கிலேயனுக்கு நெருக்கடிகளை கொடுத்திருக்கிறார்கள் ( ஒரே கோரிக்கைக்காக )

பாவம் பல சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இளமைக்காலங்களை சிறையிலேயே கழித்திருக்கிறார்கள் , சுதந்திரத்திற்கு பின் இந்தியர்கள் அனைவரும் நிம்மதியாக, ஒற்றுமையாக வாழ்வார்கள் என்று ......... புரிகிறது கண்டிப்பாக அவர்கள் போட்டத் தப்பு கணக்கு தான் ..........

அவர்களுக்கு தெரியாது மொழிவாரியாக இந்தியர்கள் அனைவரும் பிரிந்து , சிதையுண்டு ரத்த வெறி பிடித்து சண்டையிட்டு கொள்வார்கள் என்று .

அவர்களுடைய நல்ல எண்ணங்களும், தியாகங்களும் கடவுளுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ

மொழி தீவிரவாதிகளையும் இந்தியாவில் கடவுள் படைத்தான்

ஹிட்லர் சொன்னது போல் " சூத்திரம் பெறுவதற்கு இந்தியர்கள் அருகதை அற்றவர்கள் " என கடவுளும் நினைத்தானோ என்னவோ

ஹட்லரை எதிர்பதற்கு செண்பகராமன் என்ற இந்தியன் இருந்தான் , கடவுளை எதிர்பதற்கு . . . . . . . . ?

எலேச்டின் கூட்டணிக்கு மட்டும் இந்தியர்கள் ஒன்று செர்வர்கள் மற்ற விஷயங்களுக்கு நோ இல்லை லேது .....................

மராட்டியனுக்கு வட இந்தியனையும் பிடிக்காது , தென் இந்தியனையும் பிடிக்காது

தென் இந்தியர்களுக்குள் டனுக்கு தமிழனை பிடிக்காது, தமிழனுக்கு கன்னடனை பிடிக்காது

தமிழனுக்கு தண்ணீர் கொடுக்க கன்னடன் மறுப்பான்

அவனுடைய வியாதி சுந்தர தெலுங்கனுக்கும் பிடித்து விட்டது , மலையாள மன்னர்களுக்கும் பிடித்துவிட்டது

பிகார் , ஒர்ரிச்சா வில் மதங்களை வைத்து சண்டை , புயலானும் வெள்ளமனாலும் எந்த மதத்து காரன் கொடுத்ததாக இருந்தாலும் தின்பார்கள்

நாகலாந்து மக்கள் ஒரு படி மேலே போய் நாகள் இந்தியர்களே இல்லை என்பார்கள் , இந்தியாவிலிருந்து எங்களுக்கு விடுதலை தாருங்கள் என்பார்கள்

மும்பையில் வாழும் டெல்லி காரர்கள் உடனே மும்பையை விட்டு வெளியேறவேண்டும் என்பார்கள் , டெல்லி இந்தியாவில் இல்லையோ என்னவோ ?


சுதந்திரத்துக்கு முன் வரலாறு போராட்டம் எப்படி என்றால் .....?


ஒத்துழையாமை இயக்கம்

சட்ட மறுப்பு இயக்கம்

உப்பு சத்தியாகிரகம்

வெள்ளையனே வெளியேறு

ஆங்கில துணிகள் எரிப்பு

ஆங்கில அரசை எதிர்த்து சுதந்திர போராட்ட வீரர்களின் அறப்போராட்டம் இப்படியாக இருந்தது

இன்று முன்பயை விடு வட இந்தியன் வெளியேறு, தென் இந்தியன் வெளியேறு.....

கர்நாடகாவை விட்டு தமிழனே வெளியேறு ...............

என்று வன்முறை போராட்டங்கள் ..........சூறையாடல்கள் , கொலைகள், பலிகள் எண்ணற்ற பொது சொத்துக்களுக்கு சேதங்கள் ................

இதற்க்காகத்தான் சுதந்திர போராட்ட வீரர்கள் சிறை பட்டு , அடிபட்டு, உதைபட்டு, குடும்பம் அற்று , தன் சுக போகங்களை எல்லாம் விட்டு, இளமைக்கனவுகளை இந்தியாவிற்காக அர்ப்பணித்து பெற்று தந்தார்களா....?

அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கும் நம் மேல் ................... நாமோ பிரிவினையே நமது குறிக்கோளாக சண்டையிட்டு கொண்டிருக்கிறோம் பாவம் அவர்கள் .

இனி நாம் இந்தியன் என்று உலகை ஏமாற்றுவதை விட்டு விட்டு தமிழன், கன்னடன், மலையாளி, தெலுங்க, காஷ்மிரி, பிதரி , குஜராத்தி , மராட்டியன் என்றே வேண்டுகிரவற்க்கு வேண்டுகிரவகையில் பிரிந்து கிடக்கலாம்

இனிமேல் நான் மட்டும் அல்ல இந்த உலகமே கேட்கும் யார் இந்தியன் என்று .......?







கடவுளே நீயே சொல் எங்கே என் இந்தியன் என்று..............?

Sunday, October 12, 2008

ஒரு நாள் மட்டும். . . . . . .


முப்போகம் செழித்திடவே தேக்கி வைத்த குளத்தினிலே ,
குலமகளாய்வாழ்ந்து வரும் நிலமகள் பெற்று எடுத்தால் என்னை .

எப்போதும் உலகை காக்கும் என்னவனாம் மன்னவனாம் பாரெல்லாம் பரந்திருக்கும் தலைவனாம் கடல் அரசனை மணந்து விட்டேன் .

தாமரை மணாளன் என ஊரெல்லாம் அழைக்க கேட்டேன் , அய்யகோ!! அதிர்ந்து போனேன் ,
அத்தனையும் பொய்யென்றேன், ஊர் சொல்ல நான் கேட்டேன் , நான் சொல்ல யார் கேட்டார்?

கண்ணியமாய் வாழ்ந்திடவே அதி காலை எழுந்து முகம் மலர்ந்து நின்றேன் ,

அப்போதும் பாரெல்லாம் சொன்னது இவை எல்லாம் உனக்க்காகவென்று கதிரவேனே !!!

உண்மை சொல்ல வந்திடுவாய் , என் களங்கம் போக்க வந்திடுவாய்
இல்லையேல் நான் உண்மை கூற இன்றொரு நாள் மட்டும் உறங்கிடுவாய் ..........

Saturday, April 5, 2008

நடைபின வாழ்க்கையில்!!!


என்றோ
நடந்த திருமணம் ,
லேசாய் தெரிந்த முகங்கள் ,
மாபிள்ளையாக நான் .

அன்றே வந்த இரவு
கூச்சமும்
வெட்கமும்
நிறைந்த
இருட்டான
வெளிச்சத்தில் அவள்

எத்தனையோ முறை
என் உடுப்புகளை நனைத்த
என் மகன்

விளையாட்டாய்
அவன் உதைத்த நாட்கள்

அப்போது
எல்லாம் பூரித்து போன மனசு. . . .

சின்ன சின்ன
மறதியால்
சில தவறுகள்
ஏற்படும் போது
"கெழம் எப்போ தான் போகுமோன்னு
வெளிப்படையாய் சொல்லும் போது ,
துடித்து போகிறது இதயம் ......
கலங்கும் என் கண்கள் .......

அந்த காலங்களில்
மனம் துடித்து போனால்
ஆறுதல் சொல்ல
அவள் இருந்தால்

இப்போது
இந்த நடை பிண
வாழ்க்கையில்
அவளின் நினைவுகள் மட்டும்......!!!

Friday, April 4, 2008

புதுமை பெண்கள்


நாகரீகமாக
நான்கு இடங்களை
மட்டும்
மறைக்கும் ஆடை

மஞ்சள் பூசிய
முகத்தில்
கலர் பவுடர்கள்
கிறங்க வைக்கும்
உதட்டு சாயங்கள். . . .

மான் விழிகளில்
மயக்கும் மைகள். . . ..

கார்மேக கூந்தலில்
பிளாஸ்டிக் மல்லிகை. . . .

காளையரகளை
சொக்க வைக்கும்
உதட்டோர புன்னகை. . . . .

அசரவைக்கும்
ஆளுயர ஹீல்ஸ்
இத்தனையும் காணப்படின்........


இவைகள் தாம்

இருபத்தோராம் நூற்றாண்டு பெண்களின் அடையாளங்கள் ...........

நூறாவது மாபிள்ளை

மஞ்சள் பூசிய முகம்
ஆழ்ந்த வெட்கத்தில்

நிறத்திற்கு ஏற்றது போல
எடுப்பான திலகம்

எப்போதுமில்லை இன்று
தலை முழுக்க மல்லிகை

ஆனந்தத்தில் அடிக்கடி
முகம் பார்க்க தூண்டும் மனசு

கண்ணாடி பிம்பத்தின்
கண் சிமிட்டல்

நூறாவது மாபிள்ளை
பெண் பார்க்க வந்தானாம்

முதிர் கண்ணியை !!!!!!

நிலவே நீ !


கவிஞனின்
கனவு கன்னி !

வெப்பம் தீண்டாத
வெள்ளை மாளிகை !!

தேய்ந்தாலும் தீராத
அட்சய பாத்திரம் !!!


கதிரவனின் அந்த புறத்தில்
அர்த்த சாமத்து அழகி !!!

எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் என்றும்
முதிரா பருவ மங்கை

கவிதையே நீ தானடி !!

எழுதினேன் ,
எழுதுகிறேன்,
எழுதிக்கொண்டேயிருப்பேன்
அவளை பார்க்கும் போதெல்லாம்
புது புது வரிகளாய்!!!

பெண்ணே நீ சங்கமமா ? சரணலயமா ?

அன்ன நட , சிட்டு குருவி யின் ஓட்டம் ,
கழகு பார்வை ,
கிளியின் மூக்கு , மயில் தோகை கூந்தல் ,
குயிலின் ஓசை ,
பெண்ணே !!!!!!
நீ சங்கமமா ? சரணலயமா ?

நீ வருவாய் என

நினைவுகளை மெழுகாக்கி
செதுக்கி வைத்தேன்
இதயத்தில் உன்னை ,

உன் பார்வை பட்டு
உருகியதால்
உடல் முழுக்க
கலந்து விட்டாய்

நினைவாக
இருந்த நீ
என் வாழ்வின்
நிஜமாகிவிட்டாய் ,
என் உடலின் உயிராகி விட்டாய்
உயரின் மூலமாகிவிட்டாய்,

நினைவுகளோடு
சுமந்த உன்னை
நிஜமாகவே
சுமப்பதர்க்காக

என் வாழ்வின்
ஒவ்வொரு
வினாடியையும்
உனக்காகவே சமர்பிக்கிறேன்
நிச்சயம் நீ வருவாய் என!!!!!!

உன் அன்பு காதலன்

குமரன்

pennne

பெண்ணே
நான் உன்னோடு
இருந்த காலங்களில்
பூக்களை ரசிக்க
பழகவில்லை ,
அவற்றைவிட
மென்மையாக
நீ இருந்ததால்........
இபோதும்
நீ மென்மையாகத்தான்
இருக்கிறாய்
ஆனால்
ரொம்பவும் மௌனமாக.......
இபோதேல்லாம்
பூக்களை ரசிக்க
பழகுகிறேன் ,
ஆனால்
அவற்றின்
ஏளன சிரிப்பை
என்ன செய்ய?

காதலியே !!!!

வியக்க வைக்கிறது
உன் தந்தையின்
அறிவியல் முயற்சி
செயற்கை நிலவாய்
உன்னை படைத்து

வழிபாடு


நவ கிரக வழிப்பாட்டில் சுற்றுக்களை எண்ணுவதிலே
சிக்கி கொல்கிறது மனம்...
இதில் எதை சொல்லி... எதை வேண்ட...