
யாரென தெரியாது
யாருக்கோ
பிறந்துவிட்டேன்
தாய் முகம்
பார்க்குமுன்னே
தொட்டியில்
விழுந்துவிட்டேன்
குப்பை தொட்டியில்
விழுந்துவிட்டேன் !
குப்பை தொட்டியே
பிறப்பிடமாய்
தெருவோரமே
வளர்விடமாய்
அன்பு
பாசம்
இறக்கம்
போன்றவற்றின்
அரிச்சுவடியே
தெரியாமல்
வளர்ந்து விட்டேன்
யார் மீதும்
பாசமும் கொள்ளாமல்
நேசமும் கொள்ளாமல்
பணத்தின் மீது
பாசம் கொண்டு
பாதகம் செய்ய முனைந்தேன்,
என்னால்
தங்க நகை இழந்தோர்
எத்தனை பேர்
தாலி இழந்தோர்
எத்தனை பேர்
மேலாக
உயிரும் இழந்தோர்
எத்தனை பேர்
எண்ணிலடங்கா !!
இறைவா
நான் செய்த பாவங்களுக்கு
நீ என்னை ரட்சிக்க வேண்டாம்
கொடூரமாக எனை கொன்றுவிடு !!!
No comments:
Post a Comment