Monday, January 4, 2010

"நான் தமிழன் , நீ தமிழன், நாம் தமிழர்"

என் அன்பு உறவுகளே!
அடுத்தவனுக்கு காவடி தூக்கி தூக்கியே நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். "வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " வந்தவனை எல்லாம் வாழ வைத்துவிட்டு நம் மக்கள் இன்று வாடகை வீட்டில் குடித்தனம் பண்ணிகொண்டிருக்கிறோம்.
தமிழர்களுக்கு உள்ள எண்ணம் நமக்கென்ன வந்தது, நான் சாப்பிடுறேன் , புள்ளைங்கள படிக்கச் வெச்சேன் , சாக போறேன் . என் பேரு என் பெரபுல்லைகளுக்குகூட தெரியாம போயிடுது. இது என்ன வாழ்க்கை?.
என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த இந்த மண்ணை அடுத்தவன வாழ விட்டுட்டு ஆழ விட்டுட்டு , குந்தகூட இடம் இல்லாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கோம்.
தமிழன் இல்லாத நாடு இல்லை , ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை , நாதியும் இல்லன்னு இனி சொல்லவே வேண்டாம் . இனிமேல் இவனுக்கு வீடும் இருக்காது .
என்னைக்கு இது என்னுடைய மண் , இது எனக்கானது, இந்த நாட்டை நாம்தான் ஆளவேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறதோ அன்று தான் நாம் உருப்படபோகிறோம் .
எதற்கு எடுத்தாலும் டெல்லிய எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறோம் , மனச தொட்டு யோசிச்சு பாருங்கள் இந்திய சுதந்திரத்திற்காக நம்முடைய பாட்டனார்கள் போராடவே இல்லையா, உயிர் விட வில்லையா , வெள்ளையனின் சிறையில் வாடா வில்லையா, அப்படி இருந்தவர்கள் எல்லாரும் வெறும் பாட புத்தகத்தில் மட்டுமே தெரிபவர்களா?
இறையாண்மை - இந்த வார்த்தை உறவுகள் கொல்லபடுவதை பார்த்து அமைதியாக இரு என்ற அர்த்தம் உடையதோ என்று என்ன தோன்றுகிறது இப்போது.
இன்னும் எத்தனை உறவுகளின் மரணத்திற்கு நாம் காரணமாக போகிறோம்?. மௌனமாகவே
இருந்து தொலைத்து .
என் உறவுகளே! யோசித்து பாருங்கள், நாம் செய்தது அனைத்தும் நல்லது தானா? நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் என்ன செய்ய போகிறோம் ? ஆங்கிலேயனிடம் பெற்ற சுதந்திரத்தை இன்று டெல்லியிடம் தொலைத்து விட்டோம். எப்படி வாழ்வார்கள் நம் சந்ததியினர் , மானத்தோடும், வீரத்தோடும்.
உலகத்தில் எந்த மூளையில் தமிழன் பாதிக்க பட்டாலும் குரல் கொடுக்க கத்துகொள்வோம், அரசியல், சாதி, மதம் என்று பிரிந்து நமக்கு நாமே குழிதோண்டி கொள்ள வேண்டாமே. நமக்கான அடையாளம் மொழி, இந்த மொழி தான் உங்களை என் உறவுகலாக்கியது , உங்களை அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று அழைக்க வைத்தது . இந்த மொழி தான் உங்களை அறிமுகம் செய்தது எனக்கு.
தமிழன் பாதிக்கபட்டால் எனக்கென்ன என்று டெல்லி நினைக்கட்டும் ஆனால் என் தமிழ்நாட்டு உறவுகள் நினைக்கலாமா ?
உங்கள் எதிர்ப்பை உடனே காட்டுங்கள் எனக்கென்ன என்று இருந்த டெல்லி அதிரும், அரளும் . நமக்கான தேவை நிறைவேறும், தமிழன் பாதிக்கபடுவது நிற்கும் . அரசியல் பேரால் நாம் பிரிந்து கிடப்பதால் தான் நாம் இன்று தண்ணீருக்கும் அவஸ்த்தை படுகிறோம் . மொழியால் ஒன்றிணைவோம், தமிழனுக்கு அநீதி இழைக்கபட்டால் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
உங்கள் குரலை கொடுங்கள் போராட வேண்டியது எங்கள் வேலை .
"நான் தமிழன் , நீ தமிழன், நாம் தமிழர்"

No comments: