Wednesday, March 3, 2010

பிரேமானந்தா சாமியார் முதல் நித்யானந்த வரை எல்லோரும் அனைத்து பற்றும் உள்ள மனிதர்களே.

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனதருமை தமிழ் உறவுகளே !

நம் மக்கள் இனியாவது திருந்துவார்களா? இந்த மாதிரியான போலி சாமியார்களை பற்றி இன்று நேற்றா இந்த மாதிரியான புகார்கள் வருகிறது?
ஆண்டுக்கு ஐந்து , ஆறு சாமியார்கள் கம்பி என்ன போகிறார்கள் என்பது தெரிந்தும், அவர்கள் பின்னால் அலைகிறோம்.

அப்படி என்ன சோதனை வந்துவிடுகிறது நம் வாழ்க்கையில், அதை எப்போதும் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றும் இந்த கயவாளிகளால் மாற்ற முடியாது என்பதை ஏன் என் மக்கள் உணர மறுக்கிறார்கள் ?

அனைத்து துன்பத்திற்கும் நாமே காரணம் என்பதை உணர்ந்து , நம்மை நாமே திருத்தி கொள்ளலாமே?

கடவுள் இல்லை என்று நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைக்கு கண்டனங்க வந்தன நமது இயக்கத்தில் இருந்து, அதை நான் திருத்தி கொண்டேன்.

கடவுள் இவர்கள் தவறிழைக்க முற்படும்போது அவர்கள் மனதை மாற்றி நல்லவர்களாகவே வாழ வைத்திருக்கலாம்.

அவர்களை தவறு செய்ய விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன் ?

ஒழுக்கம் என்பது அடுத்தவர்களுக்கு சொல்வது அல்ல, நாம் கடை பிடிக்க வேண்டியது.

கடவுள் என்பவர் நமக்கு மேல் உள்ள ஒரு சக்தி என்பதாகவே வைத்துகொள்வோம், இவர்கள் யார் இடை தரகர்களா?

இந்த இடை தரகளுக்கு எதற்கு இத்தனை ஆடம்பரம், ? முற்றும் துறந்தவர்கள் என்பதாலா? ஆடைகளை கூட களைந்து விட்டு ...........?

கடவுளை வழிபடாதீர்கள் என்று சொல்ல எனக்கு எந்த உரிமையுமில்லை.

கடவுளை சந்திக்க இந்த இடைத்தரகர்களை நம்பவேண்டாமே என் உறவுகளே என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறதுஅவர்கள் ஏமாறாமல் தடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

எனக்கு தெரிந்து பிரேமானந்தா சாமியார் முதல் நித்யானந்த வரை எல்லோரும் அனைத்து பற்றும் உள்ள மனிதர்களே.
--
தோழமையுடன்

குமரகுருபரன்

No comments: