Thursday, January 1, 2009

எழுந்து வா பாரதியே !

அன்று எழுதினாய்
" தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று ".

இன்று பார்

மக்கள் பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கும் நிலையில் கோடி ரூபாய் செலவில் கோயில் கும்பாபிஷேகமாம்

ஒட்டிய வயிறும் வற்றிய மார்பும் உள்ள தாய் மார்களின் குழந்தைகளின் ஆரவாரத்தில் லிட்டர் லிட்டராய் கோயிலில் பாலாபிஷேகம்

இயற்கையின் சாபத்தால் ஒன்றுமே இல்லை இன்னும் பல லட்சம் ஏழை மக்களுக்கு


பிள்ளையார் கேட்டாராம் காஞ்சி பட்டு துட்டும் வேட்டியும்

கைஎந்தியவனுக்கு பத்து பைசா தர்மமாம்

மலையேறிய பகவானுக்கு கோடி கோடியாய் உண்டியல் காணிக்கையாம்

என்று தணியும் எம் மக்களின் பசியெனும் தாகம்
என்று மடியும் பிளாட்பார மோகம்

இது புல்லுருவிகளின் காலம் ..... இன்று வாழ்ந்த உன்னை மறந்து விட்டனர் என்றோ வாழ்ந்தானம் அவனை போற்றுகின்றனர் விழா எடுக்கவும் கோயில் கட்டவும் ...

பாரதியே !!

சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய் இன்று சந்துக்கு சந்து சாதியின் பெயர்கள்

அரசாங்கம் உன் கருத்தை ஏற்றது பள்ளி பாட புத்தகங்களுக்கு மட்டும் . . ...

எழுந்து வா பாரதியே !

எழுதியதை வாங்கிக்கொள்

முப்பது கோடி முகமுடையாள் எனின் சிந்தனை ஒன்றுடையாள் என்றாய்

இன்றிருந்தால் நீ

நூறு கோடி முகமுடையாள் அதிலும் இம்பது கோடி சாதி உடையால் என்று எழுதியிருப்பாய்

புதிதாய் பிறந்து வா பாரதியே

இல்லை இல்லை நீ எழுந்தே வா

நீ இனி பிறந்து வளர்ந்து வருவதற்குள் மடிந்து விடும் இந்த மானுட யுகம் !!

1 comment:

Unknown said...

bharathi kanda puthumai pennada ne...