Sunday, May 3, 2009

நலம்தானா?

கண்ணசைத்தாய்
காதலிகிறாயா என கேட்டு?

கவிதை தந்தாய்
காதலிக்கிறேன் என்று

சுற்றி சுற்றி வந்தாய்
உனக்கேத்த
சுந்தரன் நான் தான்
என்று
சொல்லி கொண்டு
நான் கல்லூரி செல்கையில்
நீ
காவலனாய் வந்தாய்

உன் நண்பர்களின்
மத்தியில்
என்னை
கதாநாயகி ஆக்கினாய்
சுந்தரி என்பெயர் என்பதால்
மடையனே
மாற்றி கொண்டாயா
உன் பெயரை சுந்தரென்று ......

பழைய பெயர்
பிடித்ததென்று

கவிதை எழுதினேன்
நானும் உன்னை
காதலிக்கிறேன் என்று

காதலிக்கிறோம் என்று சொல்லி
தறி கேட்டு சுற்றினோம் திசை எட்டும்

உன் வார்த்தை கேட்டு
மதி கேட்டு
உன்னோடு
உறவாடி நிக்கிறேன்
மானங்கெட்டு .......

மாசற்ற காதல்
மடியாது கண்ணே
என்றாய்
வளர்கிறது.......... என் வயிற்றில் உன் கரு ....

கட்டி காக்க
வருவேன்
காவலனாய் அல்ல
காதலனாய்
என்றாய்

இன்று
நம் குழந்தைக்கு
தகப்பனாய் வருவாயா?

என்னை
சுற்றி சுற்றி
வந்தாய்
இன்று நான்
சுற்றம் இல்லாமல்
தவிக்கிறேன் .....

சொந்தமாய்
சுகம் தேடினேன்
சொந்தங்கள்
இல்லாமல்
சுனங்கி
போயிருக்கிறேன் ......

மறக்கவும் முடியாமல்
மறைக்கவும் முடியாமல்
கலங்கவும் முடியாமல்
கலைக்கவும் முடியாமல்

சிக்கி தவிக்கிறேன்
செந்தமரையான நான்
சேற்று தாமரையாய் .....

மீழ்வேனோ நான் வாழ்வேனோ ?

வாழ்ந்தால் புறமிட்டு
பேசாதோ இவ்வுலகம் !

மனம் விட்டு பேசி
மதி கெட்டு போனேன்
மதி கேட்டதால் மானங்கெட்டு போனேன்

தூற்றுவார் தூற்று முன்னே
இவ்வுலகம் விட்டு போகிறேன்
மன்னவனே
நீ நலம்தானா?

No comments: