
என்றோ
நடந்த திருமணம் ,
லேசாய் தெரிந்த முகங்கள் ,
மாபிள்ளையாக நான் .
அன்றே வந்த இரவு
கூச்சமும்
வெட்கமும்
நிறைந்த
இருட்டான
வெளிச்சத்தில் அவள்
எத்தனையோ முறை
என் உடுப்புகளை நனைத்த
என் மகன்
விளையாட்டாய்
அவன் உதைத்த நாட்கள்
அப்போது
எல்லாம் பூரித்து போன மனசு. . . .
சின்ன சின்ன
மறதியால்
சில தவறுகள்
ஏற்படும் போது
"கெழம் எப்போ தான் போகுமோன்னு
வெளிப்படையாய் சொல்லும் போது ,
துடித்து போகிறது இதயம் ......
கலங்கும் என் கண்கள் .......
அந்த காலங்களில்
மனம் துடித்து போனால்
ஆறுதல் சொல்ல
அவள் இருந்தால்
இப்போது
இந்த நடை பிண
வாழ்க்கையில்
அவளின் நினைவுகள் மட்டும்......!!!