Wednesday, March 11, 2009

மகனே வீரனே

ஏன் பிறந்தாயா, என் செல்வமகனே.....?

உலகை உலுக்கும் உக்கிரமான போராம் ,
போர் விமானங்களுக்கு பயந்து பதுங்கு குழிகளுக்குள் புகழிடம் தேடியே பொழுதுகள் நகர்கிறது

பிழைக்க வழி இல்லை
வெடிகுண்டுகளின்
சத்தங்களுக்கு இடையில்

உன் அழுகுரல்

எனை வீரிட்டு எழ செய்து

சுதாரித்து பாலூட்ட முனைகிறேன்

இரண்டு நிமிட மௌனத்திற்கு
பின் மீண்டும்
உன் அழுகுரல்

பால் சுரக்கவில்லை

பதுங்குவதர்க்கே நாழிகைகள் போக
நான் என்ன செய்ய ?

நான்
பசியாறி
பாலூறி
உனக்கு புகட்ட .

பெட்டைகளான முப்படைகளும்

நம் போராளி தாக்குதல்களை
எதிர்க்க திராணி இல்லாமல்

பாவம் !
நம் பெண்டிரையும்,
நிராயுதபாணி மக்களையும்
கொன்று குவிக்கிறது .

பள்ளிகூடங்களும்
மருத்துவமனைகலுமே
அவர்களது
இலக்காம் .....

அதிகாரம் இல்லை
அடிமை முறை மட்டுமே
நமக்கு கிடைத்த சுதந்திரமாம் ,

கண்ணில் படும்
தமிழ் பெண்டிரெல்லாம்
ராணுவ காமுகர்களுக்கு
இரையாகட்டுமாம்

கண்ணில் படும்
தமிழ் ஆடவரெல்லாம்
கடலுக்கு இரையகட்டுமாம்

எத்தனை கொடுமையடா !

என்னடா மகனே
பால் சுரக்கவில்லையோ?

ஏனடா அழுகிறாய் ?

அழாதே
நீ தமிழனாக பிறந்தவன்

சுதந்திரம் மட்டுமே
உன் பசியை போக்கும்

வயிற்று பசியை
மறக்க கற்றுக்கொள்

வயிற்று பசியாலும்
மரணம் சம்பவிக்கும் எனும் போது
வெடிகுண்டுகளுக்கு பயந்து
பதுங்கு குழிகள் எதற்கு
என்கிறாயா?

உன்னை பெற்றதே
இம் மண்ணில்
சுதந்திரம்
பெறுவதற்காக தானே !

ஒரு போராளியை
உருவாக்கத்தானே !

உனக்கு
இந்த பதுங்கு குழிகள்
எதிரியை
கொன்று குவித்து
புதைக்க பயன்படும் .......

மார்பை முட்டி
குடித்து கொண்டிருக்கிறது
என் தமிழ் குழந்தை
பாலுக்கு பதில் வீரத்தை !!

No comments: